மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்

1. மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்
சந்தோமாய் இந்நாளை வாழ்த்திடும்
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்
இரட்சணிய கர்த்தாவாகத் தோன்றினார் – கர்த்தாதி

2. இதோ! நற்செய்தி கேளும் இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் துதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே- கர்த்தாதி

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து
ஆனந்த பாட்டைப் பாடி இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வக அன்பின் மாண்பைப் போற்றினார்- கர்த்தாதி

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புதக் காட்சி காண விரைந்து
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னனைமது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப்போற்றினார்
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்- கர்த்தாதி

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்
தம் ஜென்மமுதல் சாவுமீட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்துவருவோம்
நம்மீட்பர் பின்னே செல்ல நாடுவோம்- கர்த்தாதி

6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்
நம் ராயன் அன்பால் இரட்சிப்படைந்தோம்
அவரின் நித்திய துதி பாடுவோம்- கர்த்தாதி



mey bakdhare neer vizhiththezhumbum

1. mey bakdhare neer vizhiththezhumbum
santhomay inth nalai vazhththidum
indraikku loka meedpar jamiththar
vinnor ivvinththaiyaik kondadinar
karththathi karthdhar manitananar
iradchaniya karththavakath thonrinar – karththathi

2. itho! neerseythi kelum inraikke
immanuvel thavathin uurile
buloka meedparakab piranththar
ellarukkum santhosham nalkuvar
enre oor thudhan bethlem meybparkke
iravil thondri mozhinththiddane- karthathi

3. anth neram vanor kutam makizhnthu
aananthdha baddaib badi isainthu
vinnil karththavukku ma thuthiyum
mannil nallokkus samathanamum
enralleluya badi vazhththinar
theyvaka anbin manbaib potrrinar- karththathi

4. isseythi kedta meypar uutrukku
arbudhak kadsi kana virainththu
yosepputan thay mariyalaiyum
munnanaimathu theyva seyaiyum
kande, theyvanbai ennippotrrinar
aananthdhamay dham manththaikkekinar- karththathi

5. kettuponorai meedta nesamam
unnadha anbais sinththai seyvom nam
dham janmamudhal savumaddukkum
abbalan seydha theyva vazhkkaiyum
anbodu thiyanam seythuvaruvom
nammadpar binne sella naduvom- karthathi

6. appothu vana senaipol namum
sangkadham patalam ekkalamum
inthdhak kempeera nal biranthdhavar
anth nal nammel dham jothi veesuvar
nam rayan anbal iradsibpadainththom
avarin niththiya thuthi paduvom- karththathi